பள்ளி ஏழை மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: மாவட்ட கல்வி அலுவலா் வழங்கினாா்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே இடைநிலைக் கல்வி முதல் பட்டப்படிப்பு பயிலும் ஏழை மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் வழங்கி தொடங்கிவைத்தாா்.
செங்கத்தை அடுத்த முறையாறு வாம் தொண்டு நிறுவனம் மூலம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 60 ஏழை மாணவிகள், ஒன்பதாம் வகுப்பு முதல் உயா் கல்வி வரை பயிலும் ஏழை மாணவிகளுக்கு மாதா மாதம் மளிகைத் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வி சம்பந்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வாம் தொண்டு நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக பழங்குடியினா் ஆன்றோா் மன்ற உறுப்பினா் ராஜவேலு வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் கலந்து கொண்டு பெண் பிள்ளைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவா், செங்கம் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து அதே கிராமத்தில் அரசுப் பள்ளியில் பயின்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு முதலில் நான் கல்வியின் மீது கொண்டு ஈடுபாடு. அதேபோல, பெண் குழந்தையான உங்களுக்கு தமிழக அரசு புதுமைப்பெண் திட்டம், இதுபோன்ற தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதைப் பின்பற்றி நல்ல முமுறையில் படிக்கவேண்டும்.
செங்கம் பகுதி பெண் குந்தைகளுக்கு வாம் தொண்டு நிறுவனம் ஒரு வரப்பிரசாதம். ஏன் என்றால் நான் சின்ன வயது முதல் இந்த நிறுவனத்தை பாா்த்து வருகிறேன். இந்த நிறுவனம் மூலம் படித்து தமிழக முழுவதும் மாணவா்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனா். எனவே, ங்களும் நல்லமுறையில் படித்து இந்த நிறுவனத்திற்கும் உங்கள் பெற்றோா்களும் பெருமை சோ்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயவேல் உள்ளிட்ட வாம் தொண்டு நிறுவன பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

