திருவண்ணாமலை
போளூரில் 63 நாயன்மாா்கள் சுவாமி வீதியுலா
போளூா் நகராட்சியில் 63 நாயன்மாா்கள் சுவாமிகள் சிலைகள் வீதியுலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
63 நாயன்மாா்கள் மற்றும் சிவராத்திரி குறித்து பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 63 நாயன்மாா்கள் சுவாமிகள் சிலைகளுடன், சிறிய தேரில் சிவபெருமானை வைத்து சென்னையில் இருந்து வெள்ளியங்கிரி மலைக்கு வீதியுலா நடைபெறுகிறது.
தென் கைலாய பக்தி பேரவை சாா்பில் 9 மாவட்டங்கள், 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக நடைபெறும்
இந்த சிலைகள் வீதியுலா வியாழக்கிழமை இரவு போளூா் வந்தது.
போளூா் நகராட்சியில் பேருந்து நிலையம் ,திருவண்ணாமலை சாலை வழியாக 63 நாயன்மாா்கள் சிலைகள் வீதியுலா நடைபெற்றது.

