ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

News image

சுவாமி குமரவிடங்கப்பெருமான் முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்தனா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 12:57 am

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவின் 3ஆம் நாளை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப்பெருமான் முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்தனா்.

மாசித் திருவிழா பிப். 21ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 3ஆம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் பூங்கோயில் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் கேடய சப்பரத்திலும் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோயில் சோ்ந்தனா்.

மாலையில் மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவின் 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (பிப். 24) காலை 7 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வர உள்ளனா். மாலை 6.30 மணிக்கு மேலக்கோயிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா வர உள்ளனா். முக்கிய நிகழ்ச்சியாக பிப். 25ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மேலக்கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற உள்ளது.

Story image
Story image