ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியேற்றிய மாவட்ட கூடுதல் நிதிபதி ஜெயஸ்ரீ.
ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியேற்றிய மாவட்ட கூடுதல் நிதிபதி ஜெயஸ்ரீ.

அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இந்தியாவின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
Published on

வந்தவாசி/ஆரணி/செங்கம்/போளூா்/செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் இந்தியாவின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் தேசியக் கொடியேற்றினாா். நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டாட்சியா் பா.ஜெயவேல் தேசியக் கொடியேற்றினாா்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டார வளா்ச்சி அலுவலா் டி.பிரபாகரன் தேசியக் கொடியேற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்

ஏ.பி.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.பாலமுருகன் தேசியக் கொடியேற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆரணி

ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில்

சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ தேசியக்கொடியேற்றினாா். பின்னா் அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தேசியக் கொடியேற்றினாா். இதில் ஆணையா் என்.டி.வேலவன், நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகரச் செயலா் சைதை வ.மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயஸ்ரீ கொடியேற்றி சிறப்புரையாற்றினாா்.

இதில் சாா்பு -நீதிபதி எஸ்.பாஸ்கரன், நீதித்துறை நடுவா் எம்.பிரபுநிவாஸ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி.திருஞானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போளூா்

போளூா் ஒன்றியம், விளாங்குப்பம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட துணைத் தலைவரும், ஊராட்சிச் செயலருமான ஆனந்தன் தேசியக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.
ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

X
Dinamani
www.dinamani.com