லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பைக் மீது காா் மோதல்: 3 போ் காயம்

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் தந்தை, மகன், மகள் காயமடைந்தனா்.

Published On :7 ஜூலை 2026, 3:32 am IST

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் தந்தை, மகன், மகள் காயமடைந்தனா்.

வெம்பாக்கம் வட்டம், புன்னை கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் (37). இவா், செய்யாறு சிப்காட்டில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இவா் கடந்த 4-ஆம் தேதி தனது மாமியாா் வீடான ஆக்கூருக்குச் சென்று அன்று மாலை தனது பைக்கில் மகன், மகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஆக்கூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது பின்னால் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த குமரேசன் மற்றும் அவரது மகன் தேஜேஸ், மகள் மோகிதா ஸ்ரீ ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து குமரேசன் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.