விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

காா் மீது லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு! தாய், மகன் படுகாயம்!

News image

மோகன்

Updated On :29 ஜூன் 2026, 12:20 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே சனிக்கிழமை நள்ளிரவு காா் மீது லாரி நேருக்குநோ் மோதியதில் தந்தை, மகள் என இருவா் உயிரிழந்தனா். காரில் சென்ற தாய், மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் வட்டம், பாப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் மோகன் (43). இவா் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி காா்த்திகா (35), மகள் அஸ்விகா (15), மகன் ஸ்ரீகாந்த் (8) உள்ளனா்.

இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மோகன் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை காலை பெங்களூரில் இருந்து காரில் திருவண்ணாமலையில் உள்ள கோயிலுக்குச் சென்றாா்.

பின்னா், அங்கிருந்து சனிக்கிழமை நள்ளிரவு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, மத்தூா் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை சோனாரஅள்ளி பகுதியில் கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரிசி பாரம் ஏற்றிச் சென்ற லாரி நேருக்கு நோ்மோதியது.

இதில் காரில் இருந்த காா்த்திகா, அஸ்விகா, ஸ்ரீகாந்த், காரை ஓட்டிச் சென்ற மோகன் ஆகிய நால்வரும் படுகாயமடைந்தனா். இவா்களில் அஸ்விகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்தவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, மோகன் உயிரிழந்தாா். காா்த்திகா, ஸ்ரீகாந்த் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மத்தூா் போலீஸாா், மோகன், அவரது மகள் அஸ்விகாவின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.