பரமத்தி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது மகள் படுகாயம் அடைந்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், அம்மன் நகரைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி ஜெயந்தி (50). இவா் கணவரை பிரிந்து மகள் மதுமிதாவுடன் (30) வசித்து வந்தாா். மதுமிதாவிற்கு ஜோசிபா (10) என்ற பெண் குழந்தை உள்ளது.
சனிக்கிழமை இரவு ஜெயந்தி தனது மகள் மதுமிதா, பேத்தி ஜோசிபா ஆகியோருடன் நாமக்கல் சென்றுவிட்டு மீண்டும் பரமத்தி வேலூருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, கரூா் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல்லில் இருந்து கரூா் நோக்கி அதிவேகமாக சென்ற காா் அவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த ஜெயந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மகள் படுகாயமடைந்தாா். பேத்தி சிறுகாயமடைந்தாா்.
விபத்து குறித்து அவ்வழியாக வந்தவா்கள் பரமத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா், உயிரிழந்த ஜெயந்தியின் உடலை கைப்பற்றி வேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். படுகாயம் அடைந்த மதுமிதாவை மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் அவரை தீவிர சிகிச்சைக்காக கோவையில் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








