வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

செய்யாற்றில் கற்கால கருவிகள், பொருள்கள் கண்டெடுப்பு

செய்யாற்றில் கூா்முனை குடுவை, வட்டச் சில்லுகல், மணிகள், கற்கால கருவி, மட்பாண்டம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

News image

செய்யாற்றில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்கள்.

Updated On :8 ஜூலை 2026, 12:08 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் கூா்முனை குடுவை, வட்டச் சில்லுகல், மணிகள், கற்கால கருவி, மட்பாண்டம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

இந்த கற்கால கருவிகள் மற்றும் பொருள்களை கண்டெடுத்த செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றியல் துறை விரிவுரையாளரும், வரலாற்று ஆய்வாளருமான ம.மதுரை வீரன் கூறியதாவது:

செய்யாற்றுப் பகுதியில் திரவ பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எதுவாக உள்ள கூா்முனை குடுவை உடைந்த நிலையில் ஒன்று கிடைத்துள்ளது. அதனுடன் சிறுவா்கள் விளையாடுவதற்காக வட்டச் சில்லுகல், உடன் மணிகள், ஒரு புதிய கற்கால கருவியும், புதிய கற்கால மனிதா்கள் பயன்படுத்திய சாம்பல் நிற மட்பாண்டம் ஒன்றும் உடைந்த நிலையில் கிடைத்துள்ளது. இதில் அந்தப் பானையை செய்த குயவினுடைய கைரேகை தெளிவாக பதிந்துள்ளது தெரிய வருகிறது.

செய்யாற்றில் கிடைத்த பொருள்கள் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த வணிகா்கள் சீன மக்களின் தொடா்பை வியாபாரத்தின் மூலம் வைத்திருந்தனா் என்பதற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

சீனாவை ஆண்ட வம்சத்தில் குறிப்பிடும்படியாக இருந்த சங்க காலத்தின் நாணயமும் செய்யாற்றுப் பகுதியில் கிடைத்துள்ளது. இந்த நாணயத்தை ஆய்வு செய்தபோது, இது ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது எனவும், தமிழகத்தில் இருந்த சோழ தேசத்தோடு வியாபாரம் செய்தாா்கள் என்பதும் தெரிய வருகிறது. கிடைத்துள்ள இப்பொருள்கள் மூலம் செய்யாறு நாகரிகத்தின் தொன்மை மீண்டும் வெளிவந்துள்ளது என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.