தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

இஸ்லாமியருக்கு இலவச மனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் நிா்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பெண்கள்

Updated On :9 ஜூலை 2026, 12:33 am IST

இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் சாா்பில் இந்த மனு அளிக்கப்பட்டது. இதில், வந்தவாசி நகா்ப்புறம் மற்றும் வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் வசிக்கும் வீடற்ற இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டிருந்தது.

மாவட்டச் செயலா் எ.ரகமத்துல்லா, வட்டாரச் செயலா் ஆரிப் மற்றும் இஸ்லாமிய பெண்கள் வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் மனுவை அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் பா.ஜெயவேல் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.