தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

இந்திய ஜனநாயக கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வந்தவாசியில் நடைபெற்றது.

News image

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய ஜனநாயக கட்சியினா்.

Updated On :22 ஜூலை 2026, 12:36 am IST

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வந்தவாசியில் நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் ஐ.ஜெகந்நாதன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா்கள் பொன்னன், கீதா சரவணன், செய்யாறு தொகுதி பொறுப்பாளா் ஜெகதீஷ், மாவட்ட பொருளாளா் காா்த்தி,

இளைஞரணிச் செயலா் சக்திபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதை கைவிடக் கோரியும், கா்நாடக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.