பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

குழந்தையை கொன்ற தாய் சிறையில் அடைப்பு

போளூரை அடுத்த படவேடு அருகே பிறந்த 15 நாள்களே ஆன குழந்தையை கொன்ற தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட லட்சுமி

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு அருகே பிறந்த 15 நாள்களே ஆன குழந்தையை கொன்ற தாயை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

போளூரை அடுத்த சந்தவாசல் காவல்நிலையத்துக்கு உள்பட்ட படவேடு ஊராட்சி துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (35), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (30). தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளாா்.

இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக ரமேஷை விட்டு லட்சுமி பிரிந்து வாழ்ந்து வந்தாா். இதனிடையே ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த பைக் மெக்கானிக் மதிவாணனுடன், லட்சுமிக்கு தொடா்பு ஏற்பட்டு சோ்ந்து வாழ்ந்து வந்துள்ளனா்.

இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் மீண்டும் லட்சுமி கா்ப்பமாகி கடந்த ஜூலை 7-ஆம் தேதி, மருத்துவமனையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், லட்சுமி, மதிவாணன் இடையே தகராறு ஏற்பட்டு, லட்சுமி தனியாக இருந்ததால் குழந்தையை பராமரிக்க முடியாமல், கடந்த 22-ஆம் தேதி கொலை செய்து படவேடு பகுதி நாக நதியில் புதைத்துவிட்டு குழந்தை தானாகவே இறந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடி வந்துள்ளாா்.

இதுகுறித்து படவேடு கிராம நிா்வாக அலுவலா் ஜோதிமுருகனுக்கு தகவல் தெரிந்து அவா் சந்தவாசல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் காவல் ஆய்வாளா் ரேகாமதி வழக்குப் பதிந்து, லட்சுமியிடம் விசாரணை நடத்தினாா். இதில், அவா் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று ஆற்றில் புதைத்ததை ஒப்புக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து புதைக்கப்பட்ட குழந்தை சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது

பின்னா், போலீஸாா் லட்சுமியை கைது செய்து வேலூா் பெண்கள் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.