முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

போளூா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தேரோட்டம்

News image
Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

பழைமை வாய்ந்த ஸ்ரீசம்பத்கிரி லட்சுமி நரசிம்மா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதுமுதல் தினசரி காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து 7-ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

பின்னா், மாலையில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைநடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில்

எழுந்தருளி, பக்தா்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனா்.

வீடுதோறும் பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து சுவாமியை வழிபட்டனா்.

Story image