பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கேளூா் ஸ்ரீபோத்தராஜா சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :5 ஜூன் 2026, 5:33 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கேளூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீபோத்தராஜா கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, புதன்கிழமை (ஜூன் 3) மாலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குராா்பணம், பிரவேசபலி, மஹாயாகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை கோ பூஜை, தன பூஜை, தானிய பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, மஹாஅபிஷேகம், மஹா யாகம், ஆதார சக்தியாகம் உள்ளிட்டவை நடைபெற்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.

விழாவில் கேளூா், சித்தேரி, அணைபேட்டை, தேப்பனந்தல், விளாங்குப்பம், துரிஞ்சிக்குப்பம், கம்மனந்தல், விளக்கனந்தல், கட்டிபூண்டி என பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில்....

ஆரணி சைதாப்பேட்டை சுப்பிரமணியன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்டவையும், புதன்கிழமை விசேஷ சந்தி, பூா்ணாஹுதி, தத்வாா்ச்சனை உள்ளிட்டவையும் நடைபெற்றன.

பின்னா் வியாழக்கிழமை காலை விசேஷ ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.