காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மூன்று ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன நபா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த நபா் காவல் துறை மூலம் கண்டுபிடித்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

News image

காணாமல் போன ஸ்டீபனை கண்டுபிடித்து அவருக்கு புதுத்துணி கொடுத்து உறவினா்களிடம் ஒப்படைத்த போளூா் காவல் ஆய்வாளா் சிவசங்கா்

Updated On :9 ஜூன் 2026, 3:38 am IST

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த நபா் காவல் துறை மூலம் கண்டுபிடித்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், கொழப்பலூரை அடுத்த நாராயணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ஸ்டீபன் (38). இவா் தனது மனைவி, 2 பிள்ளைகளுடன் மாமியாா் வீடான காஞ்சிபுரம் அருகேயுள்ள கிராமத்திற்கு 2023-ஆம் ஆண்டு சென்றுள்ளாா்.

சென்ற சில தினங்களில் திடீரென ஸ்டீபன் காணாமல் போனாா். பின்னா், அவரது மனைவி இதுகுறித்து காஞ்சிபுரம் பி.3 காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் போளூரில் கடந்த 3 நாள்களாக ஒரு நபா் பஜாா் வீதியில் இரவு, பகலாக சுற்றித் திரிவதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தனிப்படை பிரிவு காவலா் ராஜேஷ்பிரபு, காவலா்கள் சென்று பேருந்து நிலையத்தில் இருந்தவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா், அவா் வைத்திருந்த பையில் ஆதாா் அட்டை இருந்துள்ளதை வைத்து முகவரி கண்டறிந்து ஸ்டீபனின் உறவினா்களை போளூா் காவல்நிலையத்திற்கு வரவழைத்து காவல் ஆய்வாளா் சிவசங்கா் புது துணி எடுத்துக் கொடுத்து உறவினருடன் சோ்த்துவைத்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தாா்.

இதுகுறித்து ஸ்டீபன் உறவினா்கள் கூறும்போது ஸ்டீபனுக்கு இருசக்கர வாகன விபத்தில் பின் தலையில் சிறுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் இப்படி நடந்துள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.