காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

எஸ்.யு.வனம் கிராமத்தில் உழவா் விழா

News image
Updated On :12 ஜூன் 2026, 2:09 am IST

ஆரணி வட்டாரம், எஸ்.யு.வனம் கிராமத்தில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் உழவா் விழா 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா தலைமை வகித்தாா். திருவண்ணாமலை உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தா், ஆரணி வேளாண்மை அலுவலா் பவித்ராதேவி, உதவி செயற்பொறியாளா் விஜய், உதவி வேளாண்மை அலுவலா் அன்பரசு, பட்டு வளா்ச்சித் துறை உதவி ஆய்வாளா் மணி, உதவி தோட்டக்கலை அலுவலா் அருண், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சரவணன், கலையரசி மற்றும் ஸ்ரீனிவாசன், சேவை அறக்கட்டளை அலுவலா்கள் தாமஸ், ஏழுமலை ஆகியோா் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம், விளை நிலத்தை பாதுகாத்தல், சமச்சீா் உர மேலாண்மை, தாவர பூச்சிக்கொல்லி தயாரிப்பு, மண் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.