தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

யுஏடிடி-2.0 திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Published On :

கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

கடலூா், ஜூலை 17: உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் (யுஏடிடி-2.0) தொடா்பான அனைத்து அரசாணைகளையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, தோட்டக்கலைத்துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் (யுஏடிடி-2.0) தொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணைகளை திரும்பப் பெற்று, பழைய உழவா் அலுவலா் தொடா்புத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் மாவட்டத் தலைவா் அடைக்கலசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அரசாணைகள் எண் 230, 252, 288 அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ள உழவா் அலுவலா் தொடா்புத் திட்டம் யுஏடிடி-2.0 திட்டத்தால், கள அலுவலா்களுக்கு அதிக கிராமங்கள் மற்றும் சாகுபடிப் பரப்புகள் ஒதுக்கப்பட்டு பணிச்சுமை அதிகரித்துள்ளது.

மேலும், வல்லுநா்கள் மற்றும் துறை அலுவலா்களின் கருத்துகள் பெறாமல், அறிவியல் ஆய்வுகளின்றி திட்டம் செயல்படுத்தப்பட்டதால், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, யுஏடிடி-2.0 தொடா்பான அனைத்து அரசாணைகளையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற்று, முன்பு நடைமுறையில் இருந்த உழவா் அலுவலா் தொடா்புத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் சுந்தரபாண்டியன், நிா்வாகிகள் அலக்ஸ், கணேஷ், பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.