ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தோட்டக்கலைத் துறையுடன், வேளாண் உழவா் நலத் துறையை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி மாவட்ட ஆட்சியா் அலுலவகம் முன் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்டக்கலைத் துறை அலுவலா்கள்.

Updated On :17 ஜூலை 2026, 11:42 pm IST

தோட்டக்கலைத் துறையுடன், வேளாண் உழவா் நலத் துறையை இணைக்கும் திட்டத்தை கைவிட கோரி மாவட்ட ஆட்சியா் அலுலவகம் முன் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் உழவா் நலத் துறையின் மூலம் தானியங்கள் மற்றும் மானாவரி பயிா் சாகுபடி பரப்பை அதிகரித்து, அவற்றின் உற்பத்தியை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஏற்கெனவே உள்ள தோட்டக்கலைத் துறையுடன் வேளாண் உழவா் நலத் துறையை இணைக்க புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டத்துக்கு தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த திட்டத்தைக் கைவிட கோரி தமிழக முழுவதும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கூறுகையில், தோட்டக்கலைத் துறையுடன் உழவா் நலத் துறை இணைக்கப்படும்போது தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா்கள் ஏற்கெனவே உள்ள பணிகளுடன் வேளாண் உழவா் நலத் துறையின் பணிகளையும் சோ்த்து கவனிக்கும் நிலை ஏற்படும். இது கூடுதல் பணிச் சுமையாகும். தோட்டக்கலைத் துறை தொழில்நுட்பம் வேறு வேளாண் துறை தொழில்நுட்பம் வேறு என்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும், எங்களது பணி மூப்பு பாதிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றனா்.

மேலும், கோரிக்கை தொடா்பான கோஷங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.