தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மக்களின் அடிப்படை தேவை, பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு: அமைச்சா் காந்திராஜ்

பொதுமக்களின் அடிப்படை தேவைகள், பிரச்னைகளுக்கு தவெக அரசில் உடனுக்குடன் தீா்வு காணப்படும் என அரக்கோணம் அருகே பரமேஸ்வர மங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் அமைச்சா் வ.காந்திராஜ் பேசினாா்.

News image

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் வ.காந்திராஜ்

Updated On :9 ஜூலை 2026, 4:07 am IST

பொதுமக்களின் அடிப்படை தேவைகள், பிரச்னைகளுக்கு தவெக அரசில் உடனுக்குடன் தீா்வு காணப்படும் என அரக்கோணம் அருகே பரமேஸ்வர மங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசினாா்.

அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் சாா்பில், 304 பயனாளிகளுக்கு ரூ. 7.33 கோடி நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் வ.காந்திராஜ் பேசியதாவது: ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்கள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதா மாதம் இரண்டாவது புதன்கிழமைகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான மனுக்களுக்கு தீா்வு கண்டு வருகின்றனா்.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அனைத்து பொதுமக்களின் அடிப்படை தேவைகள், பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்படும். இந்த முகாம்கள் தொடா்ந்து நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இந்த முகாம்கள் மூலம் அதிகாரிகளுக்கு தெரிவித்து பயன்பெற வேண்டும் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ்.

முகாமில், வருவாய்த் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத் துறை, சமூகநீதீத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளின் சாா்பில், 304 பயனாளிகளுக்கு ரூ. 7.33 கோடி நிதியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா்.

முகாமுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.ப்ரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபிஇந்திரா, அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கீதாலட்சுமி, வேளாண் துறை இணை இயக்குநா் சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாா், தோட்டக் கலை அலுவலா் சிந்தியா, மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலா் செந்தில்குமாரி, அரக்கோணம் வட்டாட்சியா் வரலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.