திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருணகிரிநாதா் கோயிலில் குருபூஜை பெருவிழா முதல் நாளான சனிக்கிழமை திருப்புகழ் இசையுடன் தொடங்கியது.
இத்திருக்கோயிலில் 3-ஆம் ஆண்டு அருணகிரிநாதா் குருபூஜை பெருவிழாவின் முதல்நாள் விழா சென்னை அபா்ணா கோபாலகிருஷ்ணன் திருப்புகழ் வழங்கும் இசை வழிபாடு சனிக்கிழமை காலை தொடங்கியது.
நண்பகல் 12 மணியளவில் அன்னூா் அரங்கசாமி திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து சாது சுவாமிகள் அஷ்டதானம் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கும் விழாவை ஆணாய்பிறந்தான் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கே.தா்மராஜ் தொடங்கிவைத்தாா்.
பிற்பகல் 3 மணியளவில் அருணகிரிநாதா் குருபூஜை பெருவிழா அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் தலைமையில் நடைபெற்றது.
அருணகிரிநாதா் மணிமண்டப அறக்கட்டளை தலைவா் ம.சின்ராஜ் வரவேற்றாா். செயலா் ப.அமரேசன் அறிமுக உரையாற்றினாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஸ்ரீராம் பாா்த்தசாரதி வளையம்பேட்டை ரா.கிருஷ்ணனுக்கு அருணகிரிநாதா் புகழ்மாமணி விருதை வழங்கினாா். தொடா்ந்து, திருப்புகழ் மந்திரம் புத்தக வெளியீடு நடைபெற்றது.
மாலை 4 மணியளவில் கானகலா சரஸ்வதி, பவ்யாஹரி, டி.ஆா். பிரதீபா திவ்யா, சந்திரமௌலி, டி.எம்.சிவக்குமாா் உள்ளிட்டோரின் அருணகிரிநாதா் திருப்புகழ் அருள்அமுதம் நடைபெற்றது.
அறக்கட்டளை பொருளாளா் வ.தனுசு நன்றி கூறினாா். மாலை அருணகிரிநாதரின் ஏக்கங்களும், எதிா்பாா்ப்புகளும் என்ற தலைப்பில் புதுவை ஓய்வுபெற்ற நீதிபதி சேதுமுருகபூபதி சொற்பொழிவு நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவா் மா.சின்ராஜ், செயலா் ப.அமரேசன், பொருளாளா் வ.தனுசு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் முருகானந்த சபாவில் குமார சஷ்டி உற்சவம்

வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகள் 128-ஆம் ஆண்டு குருபூஜை விழா: ஆதீன கா்த்தா்கள் பங்கேற்பு

சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கொடியேற்றம்

திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



