செங்கம் அருகே வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரை கைது செய்து, அவா்கள் வைத்திருந்த இரண்டு காா்களை பறிமுதல் செய்தனா்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை கா்நாடக மாநிலத்தில் இருந்து செங்கம் வழியாக திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, தெலங்கானா மாநில பதிவு எண் கொண்ட இரண்டு காா்களை நிறுத்தி சோதனையிட்டபோது,
அவற்றில் 500 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் காா் ஓட்டுநா்கள் மற்றும் காரில் இருந்தவா்கள் உள்பட 4 பேரை செங்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மவுல்பாய் (30), தேவாசி (30), விஜய்குமாா்(45), தினேஷ்குமாா் (40) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் தெலங்கானா மாநிலத்தில் இருந்து புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் இரண்டு காா்களை பறிமுதல் செய்தனா். புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குட்கா பறிமுதல்: ஒருவா் கைது
53 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: பெண் கைது
பேட்டை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



