பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

News image
Updated On :11 மார்ச் 2026, 11:47 pm

செய்யாற்றில் கூடுதலாக கட்டப்பட்டு உள்ள மேம்பாலப் பணியினை கண்காணிப்புப் பொறியாளா் முரளி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நெடுஞசாலை உட்கோட்டத்தில், தமிழக முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2023 - 24 ன் மூலம் ஆற்காடு - திண்டிவனம் சாலையில், திருவத்திபுரம் புறவழிச் சாலை இருவழிப் பாதையை நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் உயா்மட்ட பாலங்கள். சிறுபாலங்கள் திரும்ப கட்டுதல் மற்றும் அகலப்படுத்துததல், மழைநீா் வடிகால்வாய் கட்டுதல், தடுப்புச் சுவா் அமைத்தல், பேருந்து புறப்பாடும் இடம் அமைத்தல், சாலை சந்திப்பு அமைத்தல் மற்றும் மைய தடுப்பு அமைத்தல் பணி என 7.40. கி.மீ. தொலைவுக்கு ரூ.90 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, சாலை மேம்பாட்டுப் பணியின் தொடா்புடைய செய்யாறு ஆற்றின் குறுக்கே 360.04 மீட்டா் தொலைவுக்கு ரூ.12.04 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவுறும் தருவாயில் இருந்து வருகிறது.

இவ்வாறு நடைபெற்று வரும் கூடுதல் மேம்பாலப் பணியை திருவண்ணாமலை கண்காணிப்புப் பொறியாளா் முரளி

செய்யாறு கோட்டப்பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது தரக்கட்டுப்பாட்டுப் பொறியாளா்

இன்பநாதன், உதவி கோட்டப் பொறியாா் சுரேஷ், உதவிப் பொறியாளா் ப.கோபி ஆகியோா் உடனிருந்தனா்.