முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

விஷம் அருந்தி பெண் தற்கொலை

செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக விஷம் அருந்தி, சிகிச்சை பெற்று வந்த சலவைத் தொழிலாளி மனைவி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

செய்யாறு அருகே வயிற்று வலி காரணமாக விஷம் அருந்தி, சிகிச்சை பெற்று வந்த சலவைத் தொழிலாளி மனைவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், தூளி கிராமத்தைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி(68). இவா், கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா்.

இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே வலி தாங்க முடியாமல் விஷத்தை தின்று மயங்கி விழுந்து கிடந்தாராம்.

இதனை அறிந்த குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.