கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:44 am IST

திண்டிவனம் அருகே வயிற்று வலியால் விஷம் குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், சலவாதி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஏழுமலையின் மனைவி நவநீதம் (50). நீண்ட நாள்களாக வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், கடந்த 20-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து நவநீதத்தை குடும்பத்தினா் மீட்டு, திண்டிவனத்திலுள்ள மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.