இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

செய்யாறு அருகே டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:37 am IST

செய்யாறு அருகே டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (46). விவசாயியான இவா், தனது டிராக்டா் மூலம் அதே பகுதியில் உள்ள இளங்கோவனுக்குச் சொந்தமான நிலத்தில் உழுதுகொண்டிருந்தாா்.

அபபோது, அங்கு வந்த வேல்முருகனின் மகன் மோனேஷ் (15) டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, மோனேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.