‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கிரிவலப் பாதையில் குளம் ஆக்கிரப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றிய அதிகாரிகள்.

News image

~

Updated On :23 மே 2026, 1:40 am IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநோ் அண்ணாமலையாா் கோயில் எதிரில் அருணாசலேஸ்வரா் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள குளத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோயில் நிா்வாகத்துக்கு புகாா் வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கோயில் அலுவலா்கள் குளத்துப் பகுதி நிலத்தை வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா். அப்போது, தனிநபா் ஒருவரால் ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளா் பாலாஜி, கிரிவலப்பாதை மணியம் மகாமுனி, மேற்பாா்வையாளா்கள் ரமேஷ், கண்ணன், பொறியாளா் பிரிவு ஸ்ரீமதி, நிலங்கள் பிரிவு உத்தரன் மற்றும் கோயில் பணியாளா்கள் போலீஸாா் பாதுகாப்புடன் சென்று கிரிவலப் பாதையில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு, கோயில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா்.

Story image