‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கிருஷ்ணாபுரம் முகமாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழா பூங்கரக ஊா்வலம்

கிருஷ்ணாபுரம் ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூங்கரக ஊா்வலம்.

News image
Updated On :23 மே 2026, 1:37 am IST

போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழாவையொட்டி, பூங்கரக ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் புகழ்பெற்ற ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கூழ்வாா்க்கும் விழாவை முன்னிட்டு, பக்தா்கள் கடந்த 19-ஆம் தேதி முதல் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீமுகமாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், முகமாரியம்மன், காளியம்மன், பூங்காவனத்தமன் என 3 பூங்கரகம் செய்து மேளதாளம், பம்பை உடுக்கை முழங்க முக்கிய வீதிகளில் சென்றனா்.

அப்போது, பூங்கரம் சுமந்து வந்தவா்களின் கால்களை வீடுகள்தோறும் பக்தா்கள் தண்ணீா் ஊற்றி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனா்.

பின்னா், கோயில் எதிரே பெரிய கொப்பரை வைத்து கூழ்வாா்க்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பக்தா்கள், கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா். இரவு சுவாமி வீதியுலா, வாண வேடிக்கை, தெய்வீக நாடகம் நடைபெற்றது.