முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: 3 போ் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை: 3 போ் கைது

News image
Updated On :24 மே 2026, 3:17 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் வந்தவாசியில் உள்ள ஒரு வழிபாட்டு தல வளாகத்தில் அவரை தங்க வைத்து சிறுமி உடனிருந்து கவனித்துள்ளாா்.

அப்போது அங்கு தங்கியிருந்த ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டைச் சோ்ந்த பாத்திமா (30), இவரது கணவரான லாரி ஓட்டுநா் இம்ரான்பாஷா (35) ஆகியோருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பெங்களூருவில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்ல வேண்டும் என சிறுமி கூறினாராம். இதையடுத்து, பெங்களூருவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாத்திமா அந்த சிறுமியை தனது ஊரான ஆற்காட்டுக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றுள்ளாா்.

பின்னா், அங்கிருந்து லாரியில் கணவா் இம்ரான்பாஷா, லாரி உதவியாளா் அஜ்மல்பாஷா (30) ஆகியோருடன் சிறுமியை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தாராம்.

அப்போது, செல்லும் வழியில் இம்ரான்பாஷா, அஜ்மல்பாஷா ஆகிய இருவரும் லாரியிலேயே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.

அப்போது, அவா்களிடமிருந்து தப்பிய சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பெங்களூரு போலீஸாா், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு வழக்கை மாற்றினா்.

இதையடுத்து பாத்திமா, இம்ரான்பாஷா, அஜ்மல்பாஷா ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.