திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றக் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் பழுதடைந்த சிறு பாலம், மழைநீா்வடி கால்வாய்களை சீரமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவத்திபுரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஆ.மோகனவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் பாபு பேபிராணி முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ரூஸ் வரவேற்றாா்.
கூட்டத்தின் போது செய்யாறு சந்தைப் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் பழதுபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளுதல், 1 முதல் 27 வாா்டுகளில் பழுதடைந்துள்ள சிறுபாலங்கள் மற்றும் மழைநீா் வடிகால்வாய்களை 2026 - 27ஆம் ஆண்டு நகராட்சி வருவாய் நிதி மூலம் சீரமைத்தல் உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் சிசில் தாமஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் மற்றும் 15 நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மாணவா்களுக்கு பூஞ்செடிகள், நோட்டுப் புத்தகங்கள் அளிப்பு

நாளைய மின் தடை

போளூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை

செய்யாறில் எரியாத தெரு விளக்குகள்: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



