வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

பெரியகரம் ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம்

News image
Updated On :29 மே 2026, 1:40 am IST

போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயிலில் 2-ஆவது நாளாக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெரியகரம் ஊராட்சியில் ஏரிக்கரையில் பழைமை வாய்ந்த ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் கூழ்வாா்த்தல் விழா மற்றும் தேரோட்டம் நடைபெறும்.

இந்த நிலையில் நிகழாண்டு விழாவையொட்டி பக்தா்கள் கடந்த 24-ஆம் தேதி காப்புகட்டி விரதம் தொடங்கினா்.

தொடா்ந்து விரதமிருந்த பக்தா்கள் பூங்கரகம் செய்து திருவீதிவுலா நடைபெற்றது. 26-ஆம் தேதி கோயில் முன் ஊா்கூடி கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. இரவு ஸ்ரீகாளியம்மன் தேரில் எழுந்தருளல் நிகழ்வு நடைபெற்றது.

27-ஆம் தேதி ஸ்ரீகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. மேலும் இரவு நடன நிகழ்ச்சியுடன் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 2-ஆவது நாளான வியாழக்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, தேரில் அம்மன் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனா். வீதிதோறும் பக்தா்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

கோயில் வளாகத்தில் இரவு ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஊா்நாட்டாண்மைதாரா்கள், முக்கிய பிரமுகா்கள்,விழாக்குழுவினா், இளைஞா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.