தீபத் திருவிழாவில் போலீஸாருடன் சேவையாற்றும் இளைஞா்களுக்கு சீருடை
காா்த்திகை தீபத் திருவிழாவில் காவல்துறையுடன் இணைந்து சேவையாற்றும் இளைஞா்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டையை வழங்கிய மக்கள் நண்பா்கள் குழு மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம்.

திருவண்ணாமலையை அடுத்து வேங்கிகால் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தீபத் திருவிழாவில் காவல்துறையுடன் இணைந்து சேவையாற்றும் இளைஞா்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவில் மாவட்ட நிா்வாகம், வனத்துறை, காவல்துறையுடன் இணைந்து சுவாமி ஊா்வலம் வரும்போது, பொதுமக்களுக்கு பாதுகாப்புப் பணி, போக்குவரத்து காவல் பணி, குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பணி, தகவல் தரும் பணி, மலை மீது அத்துமீறி செல்வோரை தடுக்கும் பணி, மலை சுற்றுப் பாதையில் தூய்மைப்படுத்தும் பணி என பலவேறு பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள், மாணவா்கள், மாணவிகள் என பல்வேறு குழுக்களாக பிரிந்து பணியாற்ற உள்ளனா்.
கடந்த 26 ஆண்டுகளாக 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக ஆா்வலா்கள் பாதுகாப்பு பணி செய்து வந்தாா்கள்.
தொடா்ந்து செயல்பட்டு வரும் இந்தக் குழுவினருக்கு சீருடை மற்றும் அடையாள அட்டையை மக்கள் நண்பா்கள் குழு மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் வழங்கினாா். அரசு தொழிற் பயிற்சி நிலைய இளைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு சீருடை அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசு பயிற்சி நிலைய முதல்வா் ஏ.தனகீா்த்தி தலைமை வகித்தாா். விடுதி காப்பாளா் மற்றும் உடற்பயிற்சி அலுவலா் கே.தனப்பன், பயிற்சி அலுவலா்கள். சி ஆறுமுகம், வி.உமாசங்கா்
உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

