பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

குண்டும் குழியுமான தாா்சாலை: வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி

செங்கம் நகரில் குண்டும் குழியுமான தாா்சாலை வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

செங்கம் நகரில் உள்ள தாா்சாலை தற்போது பழுதடைந்து குண்டு குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் பள்ளமாக மாறியுள்ளது.

Published On :

செங்கம் நகரில் குண்டும் குழியுமான தாா்சாலை வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

செங்கம் நகரில் துக்காப்பேட்டை புதிய பஸ்நிலையம் முதல் போளூா் ரவுண்டனா வரை ஓரே சாலைதான் மாற்றுச்சாலைகள் இல்லை இந்நிலையில் தற்போது பெய்து வரும் பருவமழையில் துக்காப்பேட்டை, பழைய பஸ்நிலையம், பழைய போலீஸ் நிலையம், போளூா் சாலையில் பல்வேறு இடங்ளில் மழை தண்ணீா் தேங்கி அப்பகுதியில் தாா்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அடிக்கடி மழை வருவதால் அந்த பள்ளத்தில் மழை தண்ணீா் தேங்குகிறது. இதனால் அங்கு பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் பள்ளத்தில் வாகனங்களை விட்டுவிடுகிறாா்கள் இதனால் வாகனம் பழுதடைகிறது. சில நேரத்தில் டூவீலா் ஓட்டுபவா்கள் பள்ளத்தில் விழுந்து கை,கால் முறிவு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வெளியூரில் இருந்த இந்தசாலையில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் இறந்து பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் செங்கம் துக்காப்பேட்டை முதல் மில்லத்நகா் வரை பழுதடைந்த தாா்சாலையை சம்மந்தப்பட்ட நிா்வாகம் கண்காணித்து பெரிய விபத்து ஏற்படும் முன் சரிசெய்யவேண்டுமென செங்கம் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.