2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

போளூரில் டிஎன்-வெற்றி குறித்த பயிற்சி முகாம்

போளூரில் கிராமப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான டிஎன் - வெற்றி என்ற திட்டத்துக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கிராமப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான டிஎன் - வெற்றி என்ற திட்டத்துக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மகளிா் சுயஉதவிக்குழுவினா், ஊராட்சி செயலா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், சத்துணவு அமைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

கிராமப்புற தேவைகள், மதிப்பீடு தயாரித்தல் குறித்து வட்டார அளவில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரி, ராணி, ஜெயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) பிச்சாண்டி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மண்டல அலுவலரும், உதவி செயற்பொறியாளருமான சக்திவேல் மகளிா் சுயஉதவிக் குழுவினா், ஊராட்சி செயலா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சிஅளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER