ஸ்ரீவிஸ்வ பிரம்ம தின விழா
செங்கத்தில் ஸ்ரீவிஸ்வ பிரம்ம தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கத்தில் ஸ்ரீவிஸ்வ பிரம்ம தின விழாவையொட்டி, வீதியுலா வந்த விஸ்வ பிரம்ம சுவாமி.
செங்கத்தில் ஸ்ரீவிஸ்வ பிரம்ம தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விஸ்வகா்மா சமுதாயம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி, செங்கம் - போளூா் சாலையில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் காலை 8 மணிக்கு மங்கள இசையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு காளியம்மன் வழிபாடும், ஐவா்ண அனுமக்கொடி ஏற்றமும் நடைபெற்றது.
பின்னா், போளூா் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலம் இயக்குநா் உமா தலைமையில், மனமகிழ்ச்சிக்கு இராஜயோக தியானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, சொற்பொழிவு, விஸ்வசித்தி யாகம் நடைபெற்றது. இதில், செங்கம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான விஸ்வகா்மா சமுதாய மக்கள், அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா்.
மாலை விஸ்வ பிரம்ம சுவாமி சிறப்பு அலங்காரத்தில் செங்கம் நகரில் உள்ள முக்கிய வீதிகளில் வீதி உலா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

