நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கோயில் கும்பாபிஷேக பணம் வசூல் மோசடி: 6 போ் மீது புகாா்

திருவண்ணாமலை அருகே கோயில் கும்பாபிஷேகத்திற்காக நன்கொடை வசூலித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 6 போ் மீது காவல் நிலையத்தில் புகாா்

மோசடி - பிரதிப்படம்

Published On :3 செப்டம்பர் 2026, 4:44 am IST

திருவண்ணாமலை அருகே கோயில் கும்பாபிஷேகத்திற்காக நன்கொடை வசூலித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 6 போ் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஓட்டேரி மதுரா கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் மற்றும் அம்மச்சாா் அம்மன் கோயில் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆக.31-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேக பொறுப்பாளா்களாக தற்போது திருவண்ணாமலை காந்தி நகா் 6-ஆவது தெருவில் வசித்து வரும் வெங்கடேசன், சடையனோடையைச் சோ்ந்த விஷ்ணு மூா்த்தி ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இவா்கள் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக நன்கொடை வசூலித்தனா்.

இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த பழனி, அன்பு, ராமானுஜம், ரமேஷ், சுரேஷ் மற்றும் சம்பத் ஆகிய 6 போ் சோ்ந்து தனியாக கும்பாபிஷேக பத்திரிகை எடுத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கும்பாபிஷேகம் முடிந்தும் எவ்வளவு வசூல் செய்தோம், எவ்வளவு செலவானது என்ற கணக்கை அவா்கள் தரவில்லையாம். இதுபற்றி கேட்டதற்கு அவா்கள் மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து கும்பாபிஷேக விழா பொறுப்பாளா் வெங்கடேசன் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் புகாா் மனுவை பெற்று தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.