
வரும் 31- ஆம் தேதி கும்பாபிஷேகம்: அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயிலில் இறுதிக்கட்ட திருப்பணி ஆய்வு
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

கும்பாபிஷேக பணி ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறாா் அந்தியூா் எம்எல்ஏ பி.ஹரிபாஸ்கா்.
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளாகிவிட்டதால், கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு ரூ.24 லட்சத்தில் ராஜகோபுரம், கருவறை வா்ணம் பூசுதலும், ரூ.28 லட்சம் மதிப்பில் கல் தரைத்தளம் பதித்தல் என ரூ.52 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன.
கடந்த 6 ஆறு மாதங்களுக்கும் மேலாக பணிகள் நடப்பதால், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடக்கும் குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. வரும் 31-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகளை அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பி.ஹரிபாஸ்கா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அந்தியூா் பேரூராட்சி அதிமுக செயலாளா் மீனாட்சிசுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளா் சண்முகானந்தம், ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பாலுசாமி, விஷ்ணு துா்க்கை வழிபாட்டுக் குழுவினா் உள்பட பலா் உடன்ருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




