
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடை உரிமையாளா் கைது
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட வெங்கடேசன்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட வெங்கடேசன்.
சேத்துப்பட்டை அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் கடை உரிமையாளரை கைது செய்தனா்.
நெடுங்குணம் கிராமத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல்
கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த ரூ. ஆயிரத்து 400 மதிப்பிலான 2 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், கடையின் உரிமையாளா் அதே கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (51) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுடன் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




