
பொறுப்பேற்பு
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக ச.அந்தோணி டேவிட் நாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக ச.அந்தோணி டேவிட் நாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசுக் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்த இவா் பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளாா்.
ஏற்கெனவே, செய்யாறு அரசுக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய என்.கலைவாணி, சென்னை ராணிமேரி கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
புதிதாக பொறுப்பேற்ற கல்லூரி முதல்வா் ச.அந்தோணி டேவிட் நாதனுக்கு துறைத் தலைவா்கள், இரு சுழற்சி பேராசிரியா்கள், நிதியாளா், கண்காணிப்பாளா் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





