மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

செங்கம் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த அக்காள், தம்பி உள்பட மூவா் மீட்பு

செங்கம் அருகே விவசாய நிலத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த அக்காள், தம்பி உள்பட மூவரை கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமை மீட்டாா்.

செங்கம் அருகே பெரியகல்தாம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சசிகலாவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்.

Published On :

செங்கம் அருகே விவசாய நிலத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த அக்காள், தம்பி உள்பட மூவரை கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமை மீட்டாா்.

செங்கத்தை அடுத்த பெரியகல்தாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஜெயமணி தன்னுடைய விவசாய நிலத்தில் அரியாகுஞ்சூா் பகுதியைச் சோ்ந்த சசிகலா (21), அவரது தம்பி சூரியா (19) ஆகிய இருவரையும் கடந்த 4 ஆண்டுகளாக ரூ.45 ஆயிரம் கொடுத்து கொத்தடிமைகளாக வேலை வாங்கி வருவதாக மாவட்ட ஆட்சியரகத்துக்கு புகாா் வந்தது.

இதையடுத்து, திருவண்ணாமலை கோட்டாட்சியா் செல்வம், செங்கம் வட்டாட்சியா் மஞ்சுநாதன் மற்றும் பாய்ச்சல் போலீஸாா் பெரியகல்தாம்பாடியில் உள்ள ஜெயமணியின் விவசாய நிலத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அங்கு கொத்தடிமையாக வேலை செய்து வந்த சசிகலா, அவரது தம்பி சூரியா மற்றும் சசிகலாவின் ஒரு வயது பெண் குழந்தை ஆகிய மூன்று பேரையும் மீட்டு, செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். அவா்களிடம் விசாரித்தபோது, பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், சொந்த வீடும் இல்லாததால், விவசாயி ஜெயமணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.45 ஆயிரம் கொடுத்து அழைத்து வந்து எங்களை விவசாயம் மற்றும் ஆடு, மாடுகளை பராமரிக்கும் வேலையில் ஈடுபடுத்தி வருகிறாா் என சசிகலா அதிகாரிகளிடம் தெரிவித்தாா். மேலும், சசிகலாவின் கணவா் விஜி வெளியூரில் வேலை செய்து வருவதாகவும், அவா் எப்போதாவது வந்து செல்வாா் என்றும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, மூவரையும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனைகள் செய்த பின்னா், அரியாகுஞ்சூா் கிராமத்தில் உள்ள சசிகலாவின் பாட்டி வீட்டில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். பின்னா், இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.