டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

திருவண்ணாமலை திமுக எம்.பி. வீடு, உறவினா் நிறுவனத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி.யும், அக்கட்சியின் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீடு, அவரது உறவினரின் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை உறவினரின் ஏ.பி.யு கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி ஆவணங்களை எடுத்துச் சென்ற ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்.

Published On :

திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி.யும், அக்கட்சியின் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சி.என்.அண்ணாதுரை வீடு, அவரது உறவினரின் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

சி.என்.அண்ணாதுரை கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் திருவண்ணாமலை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறாா். திமுக ஆட்சிக்காலத்தில் இவரது குடும்ப உறுப்பினா்கள் மூலம் ஏ.பி.யு. கன்ஸ்டரக்ஷன் என்ற நிறுவனம் அரசு ஒப்பந்ததாரா் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறையின் ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்து வருவதால், அளவுக்கு அதிகமாக சொத்து சோ்த்திருப்பதாகவும், திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமப் பகுதியில் கடந்தாண்டு திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்ற நிலையில், இதற்காக அந்தக் கிராமத்திலுள்ள ஏரியிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கான லோடு மண் அள்ளுவதற்கு இவருக்குச் சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாவும் அறப்போா் இயக்கம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் 15-க்கும் மேற்பட்டோா் திருவண்ணாமலை வேங்கிகால், தென்றல் நகா் பகுதியில் உள்ள சி.என்.அண்ணாதுரை வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவரது உறவினா்களால் நடத்தப்பட்டு வரும் ஏ.பி.யு. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன அலுவலகத்திலும் 8 மணி நேரம் சோதனை நடத்தினா். இந்த அலுவலகத்திலிருந்து சில ஆவணங்களை போலீஸாா் எடுத்துச் சென்றனா்.

எம்.பி. விளக்கம்: பின்னா், செய்தியாளா்களிடம் அண்ணாதுரை எம்.பி. கூறியதாவது: இடைத்தோ்தல் நடத்தப்படும் இந்த சூழலில் தமிழக அரசு உள்நோக்கத்தோடு, எனது தோ்தல் பணியை சீா்குலைக்கவும், முடக்கும் நோக்கிலும் ஊழல் தடுப்புப் பிரிவு மூலம் சோதனை நடத்துகின்றனா்.

ஏ.பி.யு. கன்ஸ்டரக்ஷன் நிறுவனம் மூலம் சட்டத்துக்குப் புறம்பான எந்தப் பணிகளையும் செய்யவில்லை. இருப்பினும், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் சோதனைக்கு முறையான ஒத்துழைப்பை நானும், எனது உறவினா் நிறுவனத்தினரும் வழங்கினோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.