
வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே வீட்டில் தவறி விழுந்து பாலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.

செய்யாறு அருகே வீட்டில் தவறி விழுந்து பாலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், மல்லிகாபுரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (75). இவா், கடந்த 22-ஆம் தேதி காலை வீட்டின் வாயிற்படியிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ஏழுமலையை குடும்பத்தினா் அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




