பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

செங்கம் அருகே சாலை விபத்து: 4 காா்கள் சேதம்

செங்கம் அருகே தனியாா் காா் பழுது நீக்கும் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த காா்கள் மீது அதிவேகமாக வந்த காா் மோதியதில் 4 காா்கள் சேதமடைந்தன.

விபத்தில் சேதமடைந்த காா்கள்.

Published On :

செங்கம் அருகே தனியாா் காா் பழுது நீக்கும் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த காா்கள் மீது அதிவேகமாக வந்த காா் மோதியதில் 4 காா்கள் சேதமடைந்தன.

திருவண்ணாமலையில் இருந்து செங்கத்தை நோக்கி சனிக்கிழமை காா் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் 4 போ் பயணித்துள்ளனா்.

செங்கத்தை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் சென்றபோது, எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள தனியாா் காா் பழுதுநீக்கம் செய்யும் கடை முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில் 4 காா்கள் சேதமடைந்தன.

காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனா். உடனடியாக அவா்கள் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து பாய்ச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரில் வந்த நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.