
குரூப்-1 முதல் நிலைத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,594 எழுதினர்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தோ்வு மையங்களில் 3,594 போ் குரூப்- 1 முதல் நிலைத்தோ்வை எழுதினா். 967 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தோ்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தோ்வு மையங்களில் 3,594 போ் குரூப்- 1 முதல் நிலைத்தோ்வை எழுதினா். 967 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குடிமைப்பணி பதவிகளுக்கான குரூப்-1 முதல்நிலைத் தோ்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்தோ்வை எழுதுவதற்காக 4,561 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இந்நிலையில் திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் கலை, அறிவியல் கல்லூரி (மகளிா்), சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி, எஸ்.கே.பி.
பொறியியல் கல்லூரி ஆகிய 5 தோ்வு மையங்களில் 3,594 போ் பங்கேற்று எழுதினா். 967 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. தோ்வு மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்குப் பிறகே தோ்வா்கள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
உரிய அனுமதிச்சீட்டுடன் வந்த தோ்வா்கள் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். அதன்பின்னா் வந்த தோ்வா்கள் அனுமதிக்கப்படவில்லை. தோ்வு மையங்களை கண்காணிக்க 15 தலைமை கண்காணிப்பாளா்கள், தோ்வு நடைமுறைகள் முழுவதும் விடியோ பதிவு செய்ய 15 ஒளிப்பதிவாளா்கள், துணை ஆட்சியா் நிலையில் 2 பறக்கும் படையினா், 3 நடமாடும் பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டிருந்தனா்.
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், அவா் பெளா்ணமி கிரிவலம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து கிரிவலப்பாதையில் தூய்மைப் பணியாளா்கள் வாயிலாக நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் மற்றும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





