இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொழிற்கல்வி பட்டயத் தேர்வு முடிவு:

அண்மையில் வெளியான தொழிற்கல்வி பட்டயத்தேர்வு முடிவுகளில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:25 pm

தினமணி

அண்மையில் வெளியான தொழிற்கல்வி பட்டயத்தேர்வு முடிவுகளில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் 5ஆம் பருவத் தேர்வில் மாணவி எஸ்.வென்சி ஸ்வேதா 600-க்கு 595 மதிப்பெண்கள்களைப் பெற்று மாநிலத்தில் முதலிடத்தையும், 2ஆம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் மாணவி கே.ஷாஹினாபானு 700-க்கு 694 பெற்று மாநிலத்தில் 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இக்கல்லூரி மாணவி அபிராமி, மாணவர்கள் ஆர்.கிருஷ்ணன், கே.நூர்மா, பி.திருமால் உள்ளிட்டோரும் மாநில அளவிலான  பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதையடுத்து, இவர்களைப் பாராட்டி பரிசுகளை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் சனிக்கிழமை வழங்கினார்.

ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கே.சாம்பமூர்த்தி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜி.செந்தில்குமார், துறைத் தலைவர் ஜி.சுதா, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், பாலிடெக்னிக் கல்லூரி மேலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கல்லூரி ஆண்டுதோறும் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பிடித்து வருகிறது என கல்லூரி நிர்வாகிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.