தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேரள பிரசாரம் மேற்கு வங்கத்தில் எதிரொ! கலக்கத்தில் கம்யூனிஸ்ட்

கேரளத்தில் பகை; மேற்கு வங்கத்தில் உறவு என காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை செய்துள்ள இரட்டை நிலைப்பாடு இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2016, 5:19 pm

அ. சர்ஃப்ராஸ்

கேரளத்தில் பகை; மேற்கு வங்கத்தில் உறவு என காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை செய்துள்ள இரட்டை நிலைப்பாடு இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைமையை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சிப்பதை சுட்டிக்காட்டி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் பிரசாரம் செய்து வருகின்றன. இது, மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும், அவர்களுடன் தேர்தல் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர்களையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

கேரளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரத்தை தொடங்கிய அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள தற்போதைய முதல்வர் உம்மன் சாண்டியை கடுமையாகச் சாடினார்.

மேலும், "கேரளத்தில் பல்வேறு ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ள ஆளும் காங்கிரஸுக்கு, அந்தக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கி வருகிறார்' என்று அச்சுதானந்தன் விமர்சித்தார்.

இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில பிரசாரத்தில் எதிரொலித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரையே, கேரள மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வருவதாக திரிணமூலம் காங்கிரஸும், பாஜகவும் பிரசாரம் செய்து வருகின்றன. இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு அண்மையில் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை சந்தித்த மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்கள், "காங்கிரஸ் தலைமை மீதான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்று அச்சுதானந்தனிடம் வலியுறுத்த வேண்டும்' என்று கூறினர். கட்சியினரின் கருத்துகளைக் கேட்ட யெச்சூரி, "அச்சுதானந்தனை யாராலும் தடுக்க முடியாது' என்று கூறி கையை விரித்துவிட்டாராம்.

இந்த விவகாரத்தால் கேரள மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொள்ளத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இடதுசாரிகள் குற்றம்சாட்டி வரும் கேரள முதல்வரோ, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்யத் தயார் என்று கூறிவிட்டார். அவரது வருகையை திரிணமூல் காங்கிரஸும், பாஜகவும் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றன. இதனால், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் என்ன செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.

கேரளம், மேற்கு வங்கத்தில் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுத்திருக்கும் இரட்டை நிலைப்பாடு அவர்களுக்கு கை கொடுக்குமா? அல்லது கட்சியை மேலும் பலவீனப்படுத்துமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.