குடியாத்தம் ராபின்சன் குளத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த ராபின்சன் குளம் ரூ. 2.85 கோடியில் அண்மையில் சீரமைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் 27-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் அதைத் திறந்து வைத்தார்.
குளத்தைச் சுற்றி பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில், ராபின்சன் குளத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம், ரோட்டரி தலைவர் ஜே.கே.என்.பழனி வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தார். அப்போது, இதுகுறித்து பரிசீலிப்பதாக ஆட்சியர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சௌதிக்கு எதிராக ஹௌதிகள் ராணுவ நடவடிக்கை! 48 கப்பல்கள் முடக்கம்!

தவெக ஆட்சியைப் பாராட்டலாம்! - பிரேமலதா விஜயகாந்த்! | CM Vijay | TVK | DMDK

டாக்ஸிக் படத்தினால் கிடைத்த நன்மைகள்... மனம் திறந்த கியாரா அத்வானி!

நயன்தாரா - கவின் நடித்த 'ஹாய்' படம் - புகைப்படங்கள்
விடியோக்கள்

தவெக ஆட்சியைப் பாராட்டலாம்! - பிரேமலதா விஜயகாந்த்! | CM Vijay | TVK | DMDK


