கந்து வட்டி புகார்: திமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது
அரக்கோணம் நகரில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக திமுக பிரமுகர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.


அரக்கோணம் நகரில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக திமுக பிரமுகர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணம் ஜோதி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் பாலா (எ) பாலசுப்பிரமணியன். இவர், அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம், செந்தில் நகரைச் சேர்ந்த குமரவேலுவிடம் (46) கடன் பெற்றாராம்.
இந்நிலையில் மாதம் ரூ. 2,600 வட்டி கேட்டு பாலாவை குமரவேலு மிரட்டியதாக அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில் பாலா புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குமரவேலுவை கைது செய்தனர்.
இதேபோல அரக்கோணத்தை அடுத்த எஃகு நகரைச் சேர்ந்த வடிவேலு, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கஜேந்திரனிடம் (63) கடன் வாங்கியிருந்தாராம். மாதம் ரூ. 1, 500 வட்டி கேட்டு வடிவேலுவை கஜேந்திரன் மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கஜேந்திரன் அரக்கோணம் நகர திமுக முன்னாள் துணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் அவ்வை நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (20). ஆட்டோ ஓட்டுநரான இவர்,திருப்பத்தூர் கெளதமபேட்டையைச் சேர்ந்த டி.சி.கார்த்திக்கிடம் (36) ரூ. 50 ஆயிரம் கடன் பெற்றாராம்.
இந்நிலையில், வியாழக்கிழமை கார்த்திக் வட்டி மற்றும் அசல் கேட்டு பிரபுவுக்கு மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...