சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்

அரக்கோணம் நகர பஜாரில் மொத்த விலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:58 pm

DIN

அரக்கோணம் நகர பஜாரில் மொத்த விலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
அரக்கோணம் நகர பஜார் தெருவில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக அரக்கோணம் உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேவராஜுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடன் உணவுப் பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை அங்குள்ள பல கடைகளில் சோதனை நடத்தினர். 
அப்போது, பஜார் தெருவில் இருந்த ஒரு கடையில் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அக்கடையில் இருந்த உணவுப் பொருள்களின் தரம், தயாரிப்பு தேதி உள்ளிட்டவை குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. 
இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு பெற்று அழிக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலர் தேவராஜ் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.