தமிழக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், காட்பாடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான எம். ஏ.ஜெயவேலு நினைவு நாளையொட்டி, சிறப்பு இலவச சித்த மருத்துவ முகாம் சேர்க்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, சத்துவாச்சாரி இம்ப்காப்ஸ் அமைப்பின் இயக்குநர் கே.பி.அருச்சுணன் தலைமை வகித்தார். ஜெ.புரட்சிதாசன் முகாமைத் தொடங்கி வைத்தார். எம்.ஏ.ஜெயவேலுவின் மனைவி பாக்யா ஜெயவேலு மருத்துவ மூலிகைக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
முகாமில், சேர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின் குடிநீர் பயன்பாட்டுக்காக புதிய மின் மோட்டாரை கே. பி. அருச்சுணன் வழங்க, அதை பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.சைமன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, கே.பி.அருச்சுனன் தலைமையில் மருத்துவர்கள் பி.செல்வம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு நாடி பரிசோதனை செய்து பல்வேறு நோய்களுக்கு இலவச சித்த மருந்துகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதில், மகளிருக்கான மருத்துவம், மருத்துவ ஆலோசனைகளும், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் மூட்டு நழுவுதல், எலும்பு முறிவு ஆகியவற்றிற்கு கட்டுபோட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்த முகாமில் 700-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெற்றனர். நிகழ்ச்சியில், சேர்க்காடு முன்னாள் ஊராட்சித் தலைவர் எஸ்.எம். லோகநாதன், அரசுப் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெ.கிருபாகரன், எராந்தாங்கல் முன்னாள் ஊராட்சித் தலைவர் பி.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








