திருப்பத்தூரை அடுத்த கந்திலியில் தார்ச் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குண்டும், குழியுமான சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூரை அடுத்த கந்திலில் இருந்து காக்கங்கரை வரை செல்லும் தார்ச் சாலை குண்டும், குழியுமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறிவந்தனர். இதையடுத்து அப்பகுதியில் தார்ச் சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
ஆனால், மோட்டூரில் இருந்து காக்கங்கரை வரை மட்டுமே செப்பனிடப்பட்டு, சாலை புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், கந்திலியில் இருந்து மோட்டூர் வரை செல்லும் தார்ச் சாலை புதிப்பிக்கபடவில்லை.
ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மோட்டூர், தொங்கனூர், பரதேசிப்பட்டி, கோல்கானூர், கண்ணாலப்பட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கந்திலியில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் சந்தைகளில் வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், இரவில் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர்.
இதுகுறித்து கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் க.சீனிவாசனிடம் கேட்டதற்கு, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 26 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குறிப்பிட்ட சாலை வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
பேருந்து வசதி இல்லை...: கந்திலியில் இருந்து காக்கங்கரை செல்ல பேருந்து வசதி இல்லை. சுமார் ஒரு ஆண்டுக்கு முன் இயக்கப்பட்டு வந்த டி-31 எனும் வழித்தடப் பேருந்து தற்போது இயக்கப்படுவதில்லை. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இப்பிரச்னைகளுக்கு அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








