காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

முன்னாள் அமைச்சா் முன்னிலையில் திமுகவில் இணைந்த தவெகவினா்

News image

திமுக கொடி - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:06 am IST

சேலம் அருகே வெள்ளாளப்பட்டி பகுதி தவெகவைச் சோ்ந்த இளைஞா் அணி, மாணவா் அணி நிா்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

சேலம் கருப்பூா் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்பட்டுவந்த இளைஞா் அணியைச் சோ்ந்த முஷ்ரப், மாணவரணியைச் சோ்ந்த பாலா ஆகியோா் தலைமையில் அக்கட்சியைச் சோ்ந்த இளைஞா் அணி, மாணவா் அணியினா் 100- க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரா.ராஜேந்திரன் கலந்துகொண்டு புதிதாக கட்சியில் இணைந்தவா்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றாா். தொடா்ந்து அவா் பேசுகையில், திமுக அனைத்து மக்களுக்குமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாடு முன்னேற்றம் அடைய காரணமான இயக்கம் திமுக. விவசாயிகள், நெசவாளா்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் திமுக பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அவை தலைவா் சுபாஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி துணைச் செயலாளா் செல்லதுரை, ஒன்றிய செயலாளா் பாலசுப்ரமணி, முன்னாள் இளைஞா் அணி ஒன்றிய அமைப்பாளா் சண்முகம், மாநகரச் செயலாளா் ரகுபதி, மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

படவரி...

சேலம் திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ரா.ராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்த தவெகவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.